தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது மாணவி மீது ஃபேன் விழுந்த பயங்கரம்..!


தேர்வு நடந்த பள்ளிக்கூடம் image courtesy: ANI
x
தேர்வு நடந்த பள்ளிக்கூடம் image courtesy: ANI
தினத்தந்தி 2 May 2022 9:21 PM IST (Updated: 2 May 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது மாணவி மீது ஃபேன் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி,

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது மின்விசிறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் சோமண்டிப்பள்ளியில் உள்ள விக்னன் பள்ளியில் 10-ம் வகுப்பு பரீட்சை எழுதிக் கொண்டிருந்த போது மின்விசிறி கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியின் மீது விழுந்தது. 

இதையடுத்து மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எந்த ஆபத்தும் இல்லை என்று அரசு மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு தொடர்ந்து மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.  தேர்வுக்கு பின்னர் மாணவிக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவி நலமாக உள்ளார்.

இதுகுறித்து பள்ளி தாளாளர் கூறுகையில், தேர்வு மையம் அமைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கட்டடம் முழுவதும் உள்ள மின் வயர்கள், மின்விளக்குகள், மின்விசிறிகள் அனைத்தும் பழுதாகிவிட்டன. இன்று ஒவ்வொரு அறையிலும் மின்விசிறிகள் சரி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Next Story