அட்சய திருதியை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


அட்சய திருதியை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 3 May 2022 11:07 AM IST (Updated: 3 May 2022 11:07 AM IST)
t-max-icont-min-icon

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

புதுடெல்லி

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ அட்சய திருதியை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சிறப்பான நாள் அனைவரின் வாழ்க்கையிலும்  செழுமையை கொண்டு  இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது ஐதீகம். இதனால்  அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது.

Next Story