திருவனந்தபுரம்: மருமகளை வெட்டி கொலை செய்த தாய்மாமன் கைது..!
திருவனந்தபுரம் அருகே நடுரோட்டில் மருமகளை வெட்டி கொலை செய்த தாய்மாமனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே ஸ்கூட்டரில் வந்த மருமகளை தடுத்து நிறுத்தி வெட்டி கொலை செய்த தாய்மாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ளது வர்க்கலா பகுதியில் வசிப்பவர் ஷாலு (வயது 37). இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 9 மற்றும் 12 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இவர் இந்த பகுதியில் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி இவர் தனது நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு சாப்பிடுவதற்காக ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஷாலுவின் தாய்மாமன் அணில் என்பவர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஸ்கூட்டரை மறித்துள்ளார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஷாலுவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மயக்க அடைந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஷாலுவை மீட்டு வர்க்கலா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அணிலின் உறவினர்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவரை மடக்கி பிடித்தனர்.
இந்நிலையில் ஷாலூ நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மருமகளை தாய்மாமன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story