ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி - மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம்
நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மின்சார தட்டுபாடு ஏற்பட்டு, பல மாநிலங்களில் 2 முதல் 8 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்ததன் காரணமாகவே, மின்சார பற்றாக்குறை நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோல் இந்தியா நிறுவனம் 534.7 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 6.02% அதிகம் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story