கர்நாடக முதல் மந்திரி மாற்றப்படுவாரா? - இது ஒரு கற்பனையான கேள்வி; மாநில பாஜக பொறுப்பாளர் பதில்!
கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு சாமானியர், பொதுமக்கள் எல்லொரும் அவரை விரும்புகின்றனர்.
பெங்களூரு,
கர்நாடகா மாநில பாஜக பொறுப்பாளரும் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளருமான அருண் சிங் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம் கர்நாடகாவில் முதல் மந்திரி பதவி உள்பட ஒட்டுமொத்த மந்திரிசபை மாற்றம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீங்கள் கேட்கும் கற்பனையான கேள்விகளுக்கு பதில் இல்லை.கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு சாமானியர், பொதுமக்கள் எல்லொரும் அவரை விரும்புகின்றனர்.அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மறுசீரமைப்பு என்பது முதல் மந்திரியின் உரிமை.
பசவராஜ் பொம்மை ஒரு சாதாரண மனிதர், அவர் பிரதமரின் தலைமையில், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக பாடுபடுகிறார்.
குழப்பத்தை ஏற்படுத்த முயல்பவர்களுக்கு தெளிவான செய்தியை சொல்ல விரும்புகிறேன். தற்போதைய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலும், எடியூரப்பாவின் வழிகாட்டுதலின்படியும் ஒரு அணியாக இணைந்து, அடுத்த தேர்தலை சந்திக்க உள்ளோம்.
தேர்தலை சந்தித்து 150 இடங்களில் வெற்றி பெறுவோம். சிலர் வேறு மாயையில் இருந்தால் அதிலிருந்து வெளிவருவது நல்லது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story