சண்டிகர் : தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதியில்லை


கோப்புப்படம் PTI
x
கோப்புப்படம் PTI
தினத்தந்தி 3 May 2022 6:31 PM IST (Updated: 3 May 2022 6:31 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது


இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்தது. தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கினர். ஆனால், கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியது.

இதனால் பல்வேறு மாநில அரசு  பொது இடங்களில்  முககவசம் கட்டாயம் என தெரிவித்துள்ளது .மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களை விரைவில் தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தி வருகிறது .

இந்நிலையில் சண்டிகரில் நாளை முதல்  கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 - 18 வயது மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை .என சண்டிகர்  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு நாளை முதல் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளது 

Next Story