ஏப்ரல் மாதத்தில் வணிகப்பொருள் ஏற்றுமதி 24 சதவீதம் உயர்வு
கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் வணிகப்பொருட்கள் ஏற்றுமதி 38.19 பில்லியன் டாலராக உயர்ந்தது.
புதுடெல்லி,
கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் வணிகப்பொருட்கள் ஏற்றுமதி 38.19 பில்லியன் டாலராக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்துடன் (30.75 பில்லியன் டாலர்) ஒப்பிடுகையில், இது 24.22 சதவீதம் அதிகம் ஆகும். பெட்ரோலிய பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், ரசாயன பொருட்கள் ஆகியவற்றால்தான் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
அதே சமயத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் இறக்குமதி 26.55 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே, ஏப்ரல் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 20.07 பில்லியன் டாலர் ஆகும்.
Related Tags :
Next Story