இந்திய பெண்கள் கணவரை விட்டு தர மாட்டார்கள் - அலகாபாத் ஐகோர்ட்டு


இந்திய பெண்கள் கணவரை விட்டு தர மாட்டார்கள் - அலகாபாத் ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 4 May 2022 5:43 AM IST (Updated: 4 May 2022 5:43 AM IST)
t-max-icont-min-icon

இந்தியப் பெண் கணவர் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் என அலகாபாத் ஐகோர்ட்டு ஒரு வழக்கின் விசாரணையின் போது கூறியுள்ளது.

அலகாபாத்,

'இந்தியப் பெண், கணவர் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற எண்ணத்தில் இருப்பதால், அவர் வேறொரு பெண்ணை மணம் முடிக்கும் போது, மனமுடைந்து தற்கொலை செய்ய துணிகிறார்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு வழக்கின் விசாரணையின்போது தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியைச் சேர்ந்த சுசில் குமார் என்பவர், இரண்டாவது மனைவிக்குத் தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்து உள்ளார். இது தெரியவந்ததும், இரண்டாவது மனைவி போலீசில் புகார் அளித்து விட்டு, விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவர் அளித்த புகாரில், இரண்டு குழந்தைகளுடன் தன்னை நிர்கதியாக விட்டு விட்டு, கணவர் வேறு ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் மனைவியின் தற்கொலைக்கு காரணமான சுசில் குமாரை, போலீசார் கைது செய்தனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்து சுசில் குமார் தாக்கல் செய்த மனு, விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, சுசில் குமார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விபரம்: 

இந்தியப் பெண்கள், கணவர் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற எண்ணத்தில் உள்ளனர். இரண்டாவது மனைவியாக இருந்தாலும் இதே எண்ணம் இருக்கும்.மனுதாரர் ரகசியமாக மூன்றாவது திருமணம் செய்ததால், மனைவி மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார். இதற்கு மனுதாரர் காரணம் என்பதால், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story