எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்...!
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி,
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை 4 ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது.
இன்று தொடங்கி மே 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த பங்கு விற்பனையில் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் எல்.ஐ.சி.யின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story