ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது..!
விசாரணை செய்தபோது சென்னையில் உள்ள இவருடைய தந்தையும் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்தது அம்பலமானது.
பாலக்காடு:
சென்னையில் வசிப்பவர் ஸிஜீஷ் (வயது 41). இவர் கடந்த பல மாதமாக கேரளாவில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் பல பெண்களை சந்தித்து உங்களுக்கு சென்னையில் ரயில்வே நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி நம்ப வைத்து அந்தப் பெண்களிடம் பணம் நகை இவற்றை பறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான மூன்று மாதம் வரை இவர் அந்த பெண்களுடன் வசித்து வருவார் பின்பு காணாமல் போய்விடுவார்.
கடந்த மாதம் பாலக்காடு அருகே உள்ள அகத்தேதரா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணை சந்தித்து உங்களுக்கு சென்னை ரெயில்வே நிர்வாகத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என கூறி அவரரிடம் இருந்து பணம் நகைகளை பெற்றுள்ளார். பின்பு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறி நம்ப வைத்தார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த பெண்ணிற்கு எந்த தகவலும் வரவில்லை. சந்தேகமடைந்த அவர் பாலக்காடு ஹேமா அம்பிகை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை மேற்க்கொண்ட போலீசார் செல்போன் எண்களை பயப்படுத்தி சைபர் செல் மூலம் தேடி வந்தார்கள்.
அப்போது அவர் பாலக்காடு அருகே இருப்பது தெரியவந்தது. போலீஸார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது மேலும் ஐந்து பெண்களை இது போல் ஏமாற்றியது போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் விசாரணை செய்தபோது சென்னையில் உள்ள இவருடைய தந்தையும் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து உள்ளது பாலக்காடு போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. போலீசார் வாலிபரை கைது செய்து பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story