பரபரப்பாக இயங்கிய சர்வதேச விமான நிலையங்கள் - டெல்லிக்கு 2-வது இடம்
பரபரப்பாக இயங்கிய விமான நிலையங்களின் பட்டியல் டெல்லி விமான நிலையம் உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
புதுடெல்லி,
பயணிகள் எண்ணிக்கை மற்றும் விமான சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிக பரபரப்பான 10 விமான நிலையங்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம், 2-வது இடத்தில் துபாய் விமான நிலையம் ஆகியவை இருந்தன.
இந்த நிலையில் 2022 மார்ச் மாத நிலவரப்படி இந்த பட்டியலில் துபாய் விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் டெல்லி விமான நிலையம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், அட்லாண்டா விமான நிலையத்தில் 44.22 லட்சம் பயணிகளும், டெல்லி விமான நிலையத்தில் 36.11 லட்சம் பயணிகளும், துபாய் விமான நிலையத்தில் 35.54 லட்சம் பயணிகளும் பயணித்துள்ளனர்.
2019-ல் உலக அளவில் 23-வது இடத்தில் இருந்த டெல்லி விமான நிலையம், 2022 ஆம் ஆண்டில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2021-ல் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 3.16 கோடி உள்நாட்டு பயணிகளும், 54.9 லட்சம் சர்வதேச பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story