கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக கீர்த்தி ஆசாத் நியமனம்
கோவா மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின், தலைவராக கீர்த்தி ஆசாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கொல்கத்தா,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்காளத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் இதன் கிளைகள் இயங்குகின்றன.
தற்போது கோவா மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின், தலைவராக கீர்த்தி ஆசாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் நுழைந்தவர்.
கடந்த வருடம்தான் காங்கிரசில் இருந்து திரிணாமுல் காங்கிரசுக்கு மாறினார். அதற்கு முன்பு பீகாரில் இருந்து பா.ஜ.க. சார்பில் எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story