உத்தரபிரதேசத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி: கற்பழிப்பு புகார் கொடுக்க வந்த இடத்தில் நடந்த கொடூரம்
உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு 4 பேரால் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டு 3 நாட்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளார்.
லலித்பூர்,
உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு 4 பேரால் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டு 3 நாட்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து புகார் அளிப்பதற்காக அவளது தாய், சிறுமியுடன் பாலி போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது, சிறுமியை தனியே விசாரிக்க அழைத்துச் சென்ற போலீஸ் அதிகாரியும் அந்த சிறுமியை கற்பழித்து உள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவருக்கு தெரியவர அவர், போலீஸ் சூப்பிரண்டிடம் நேரடியாக முறையிட்ட பிறகுதான் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் கும்பலை தேடி வந்தனர். அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரியும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அத்துடன் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அந்த போலீஸ் அதிகாரியையும் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமி குழு பலாத்காரத்தில் சிதைக்கப்பட்டதுடன், புகார் கொடுக்க வந்த இடத்தில் போலீஸ் அதிகாரியாலும் கற்பழிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் பா.ஜ.க. அரசை அரசியல் கட்சியினர், பெண்கள் அமைப்பினர் உள்பட பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story