கோவோவேக்ஸ் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செலுத்தி கொள்ளலாம்; ஆதர் பூனவாலா
கோவோவேக்ஸ் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செலுத்தி கொள்ளலாம் என சீரம் இந்தியா தலைவர் தெரிவித்து உள்ளார்.
புனே,
இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு, கடந்த மார்ச் மாதம் 9ந்தேதி அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது.
இதுபற்றி சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் ஆதர் பூனவாலா கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நோவோவாக்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கிய கோவோவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் இப்போது குழந்தைகளுக்கு கிடைக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படுகிற ஒரே தடுப்பூசி இதுதான். இது ஐரோப்பாவிலும் விற்கப்படுகிறது. இந்த தடுப்பூசி 90 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறன் கொண்டுள்ளது.
இது நமது குழந்தைகளை பாதுகாக்க, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் கீழான மற்றொரு தடுப்பூசியாகும் என்று பதிவிட்டார். இந்த நிலையில், அவர் நேற்றிரவு வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், கோவோவேக்ஸ் தடுப்பூசியை வயது வந்தவர்களுக்கு செலுத்தி கொள்வது பற்றி பலரும் என்னிடம் கேள்வி கேட்கின்றனர்.
இதற்கான பதில் ஆம் என்பதே. 12 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த வாரம், நோயெதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவானது சீரம் இந்தியா அமைப்பின் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருந்தது.
Related Tags :
Next Story