நாடு முழுவதும் வெப்ப அலை: பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை எனத்தகவல்
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
நாட்டின் சில மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக இமாசல பிரதேசத்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் காட்டுத்தீ அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக சில மாநிலங்கள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடி, 7- 8 முக்கிய ஆலோசனை கூட்டங்களை நடத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. முதல் கட்டமாக வெயிலின் தாக்கம் மற்றும் மக்கள் அதில் இருந்து தற்காத்துக்கொள்வது, நிலக்கரி பிரச்சினையை சரி செய்வது ஆகியவை குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story