கொரோனா அலை முடிந்ததும் சிஏஏ அமல்படுத்தப்படும் - அமித்ஷா அதிரடி
கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி 2014-க்கு முன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக இருந்து மதரீதியில் பிரச்சினைக்களை சந்தித்து இந்தியாவில் அகதிகளாக இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சீ, கிருஸ்தவம் ஆகிய மதத்தினரை சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைக்கும்.
இதற்கிடையில், குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது சட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கொல்கத்தா மாநிலம் சிலிகுரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்படாது என திரிணாமுல் காங்கிரஸ் புரளியை பரப்பி வருகிறது.
ஆனால், நான் கூறுகிறேன், கொரோனா அலை முடிவுக்கு வந்த உடல் குடியுரிமை திருத்தச்சட்டத்தை நாங்கள் நடைமுறையில் அமல்படுத்துவோம். மம்தா ஊடுருவலை விரும்புகிறார். குடியுரிமை திருத்தச்சட்டம் அப்போதும், இப்போது, எப்போதும் நடைமுறை படுத்தக்கூடியது தான்’ என்றார்.
Related Tags :
Next Story