அரியானாவில் 2025-ம் ஆண்டு முதல் தேசிய கல்வி கொள்கை அமல் முதல்-மந்திரி அறிவிப்பு
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2025 முதல் அரியானாவில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்தார்.
ரோக்டாக்,
அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2025 முதல் அரியானாவில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்தார்.
மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் இ-அதிகாம் என்ற பெயரில் மின்னணு கற்றல் திட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது அவர் இதை குறிப்பிட்டார். அந்த உரையில் இதுகுறித்து அவர் குறிப்பிட்டதாவது:-
“மத்திய அரசு கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க இலக்கை நிர்ணயித்து தேசிய கல்விக் கொள்கையை 2030-ல் செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளது. ஆனால் நாம், கல்வியில் விரைந்து மாற்றத்தை கொண்டுவர அதை 2025லேயே செயற்பாட்டிற்கு கொண்டு வருவோம். புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த உதவும் 21-ம் நூற்றாண்டின் திறன்களை அரியானா குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள்”
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் மூலம் அரியானாவில் 5 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப்லட் கணினிகள் வழங்கப்பட உள்ளது. அதில் 3 லட்சம் டேப்லட் கணினிகள் வினியோகிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story