எம்.பி. இறந்ததாக தவறுதலாக அறிவித்த உமர் அப்துல்லா மன்னிப்பு கோரினார்
தேசிய மாநாட்டு கட்சியின் எம்.பி. அக்பர் லோன், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
ஸ்ரீநகர்,
தேசிய மாநாட்டு கட்சியின் எம்.பி. அக்பர் லோன், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவர் இறந்து விட்டதாக அக்கட்சியின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், ஒரு தனியார் செய்தி நிறுவனமும் அக்பர் லோன் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டது.
இதற்கிடையே, சில நிமிடங்கள் கழித்து, அது தவறான செய்தி என்பதை உணர்ந்து உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அவர் கூறியிருப்பதாவது:-
அக்பர் லோன் குணமடைந்து வருகிறார். எனது தந்தை (பரூக் அப்துல்லா) தவறாக புரிந்துகொண்டு என்னிடம் கூறியதால், நானும் எனது பதிவு மூலம் தவறு செய்து விட்டேன். இதற்காக அப்துல் லோனிடமும், அவருடைய குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story