சவுரவ் கங்குலி வீட்டில் இரவு உணவில் கலந்து கொண்ட அமித்ஷா


சவுரவ் கங்குலி வீட்டில் இரவு உணவில் கலந்து கொண்ட அமித்ஷா
x
தினத்தந்தி 6 May 2022 8:50 PM IST (Updated: 6 May 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி அமித்ஷாவுக்காக சைவ உணவை தயாரித்து உள்ளேன் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.



கொல்கத்தா,


மேற்கு வங்காளத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.  இதற்காக அவரை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகளை பா.ஜ.க. செய்துள்ளது.

இந்த பயணத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் சவுரவ் கங்குலியை அவருடைய வீட்டில் இன்று அமித்ஷா சந்தித்து பேசினார்.  இதன்பின்னர் இரவு உணவிலும் கலந்து கொண்டார்.

அவரது வருகையையொட்டி கங்குலி சிறப்புடன் உணவை தயார் செய்துள்ளார்.  இதுபற்றி கங்குலி கூறும்போது, மத்திய மந்திரி அமித்ஷாவின் மகனுடன் பணியாற்றிய பின்னர் அவரை 2008ம் ஆண்டில் இருந்தே எனக்கு தெரியும்.

அவரை எனது வீட்டில் இரவு உணவில் கலந்து கொள்ள வரும்படி அழைத்தேன்.  அவரும் அதனை ஏற்று கொண்டார்.  அவருக்காக சைவ உணவை தயார் செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் மத்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்த கலை நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பங்கேற்கிறார்.  இந்த நிகழ்ச்சியில் சவுரவ் கங்குலியின் மனைவி டோனா கங்குலி, தனது தீக்சா மஞ்சரி என்ற குழுவினருடன் சேர்ந்து நடனம் ஆடுகிறார்.




Next Story