நதிகளில் கழிவுநீரை தடுக்க கோரும் விவகாரம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்பிரமணிய சுவாமிக்கு அனுமதி

நதிகளில் கழிவுநீரை தடுக்க கோரும் விவகாரம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்பிரமணிய சுவாமிக்கு அனுமதி
x
தினத்தந்தி 7 May 2022 4:53 AM IST (Updated: 7 May 2022 4:53 AM IST)
t-max-icont-min-icon

நதிகளில் கழிவுநீரை தடுக்க கோரும் விவகாரம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்பிரமணிய சுவாமிக்கு அனுமதி

புதுடெல்லி, 

டெல்லி யமுனை நதியில் கழிவுநீரை கலப்பதை தடுப்பதற்கு, லண்டன் தேம்ஸ் நதியையொட்டி இருப்பதைப் போன்ற தனி கழிவுநீர் கால்வாயை கட்டமைக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், நதிகளில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தை ஏற்கனவே பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கில் நீங்கள் ஏன் இடையீட்டு மனு தாக்கல் செய்யக்கூடாது என கேட்டனர்.

அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை ஏற்ற நீதிபதிகள், இடையீட்டு மனுவை தாக்கல் செய்து, கோர்ட்டுக்கு உதவ அனுமதி அளித்தனர்.

Next Story