நாடு முழுவதும் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்க இலக்கு மத்திய மந்திரி பேச்சு


நாடு முழுவதும் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்க இலக்கு மத்திய மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 7 May 2022 5:44 AM IST (Updated: 7 May 2022 5:44 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக அதிகரிப்பதிலும், அவர்கள் தொடர்பான அரசின் இலக்கை நிறைவேற்றுவதிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.மத்திய மந்திரி பேச்சு

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடர்பான மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் மத்திய வேளாண்மைத்துறை ராஜாங்க மந்திரி கைலாஷ் சவுத்ரி பங்கேற்று பேசுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சுவாமிநாதன் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகளுக்கு போதுமான நிதி ஆதரவு கிடைக்க வேண்டும், விவசாயச் செலவு குறைக்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு தரமான விதைகளும், நல்ல சந்தை விலையும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கடந்த 2013-ம் ஆண்டில் விவசாயத்துக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு 23 ஆயிரம் கோடியாக இருந்தநிலையில், தற்போது அது ரூ.1.32 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக அதிகரிப்பதிலும், அவர்கள் தொடர்பான அரசின் இலக்கை நிறைவேற்றுவதிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

எனவே, நாடு முழுவதும் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ரூ.1 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

Next Story