புதுடெல்லி: பாஜக தலைவர் தேஜிந்தர் பால் சிங் கைது செய்யப்பட்டு விடுதலை!


புதுடெல்லி: பாஜக தலைவர் தேஜிந்தர் பால் சிங் கைது செய்யப்பட்டு விடுதலை!
x
தினத்தந்தி 7 May 2022 6:43 AM IST (Updated: 7 May 2022 7:09 AM IST)
t-max-icont-min-icon

பாஜக தலைவர் தேஜிந்தர் பால் சிங் பக்கா பஞ்சாப் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

பாஜக தலைவர் தேஜிந்தர் பால் சிங் பக்கா பஞ்சாப் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் காவல்துறை அதன் சைபர்செல்லில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தேசிய செயலாளர் தேஜிந்தர் பால் சிங் பக்கா ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், வதந்திகளை பரப்பியதாகவும்,மத மற்றும் வகுப்புவாத கலவரத்தை உருவாக்க முயற்சித்ததாகவும்,ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சன்னி சிங் புகார் அளித்ததை அடுத்து பாஜக தலைவர் தேஜிந்தர் பால் சிங் சிக்கா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், புகார்தாரர், தேஜிந்தர் பால் மீதான வீடியோ கிளிப் ஆதாரங்களை போலீஸிடம் சமர்ப்பித்துள்ளார்.இதனிடையே,மார்ச் 30 அன்று நடந்த போராட்டத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை தேஜிந்தர் பால் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, தேஜிந்தர் பால் சிங்கை நேற்று காலை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நேற்று தேஜிந்தர் பால் சிங்வின் தந்தை டெல்லி காவல்துறையை அணுகினார். ஆயுதம் ஏந்திய சிலர் தனது மகனை கடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த மனுவை விசாரித்த துவாரகா கோர்ட்டு, தேஜிந்தர் பால் சிங்கிற்கு தேடுதல் வாரண்ட் பிறப்பித்தது.

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, அரியானா மாநில காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து, பஞ்சாப் போலீஸ் குழுவால் கைது செய்யப்பட்ட தேஜிந்தர் பால் சிங், குருக்ஷேத்ராவில் அரியானா காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அதன்பின்னர், நேற்றிரவு டெல்லியில் உள்ள மாவட்ட நீதிபதி வீட்டில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின் அவரை விடுவிக்குமறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். திங்கள்கிழமை அன்று அவர் வழக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டுமென்று தெரிவித்து அவர் விடுவிக்கப்பட்டார்.  

Next Story