டெல்லியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு 3 பேர் காயம்; போலீசார் குவிப்பு


டெல்லியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு 3 பேர் காயம்;  போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 8 May 2022 4:14 AM IST (Updated: 8 May 2022 4:14 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.

புதுடெல்லி,

மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் திடீரென மர்ம நபர்கள் 10 ரவுண்டுகளுக்கு மேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மர்மநபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story