டெல்லியில் அ.தி.மு.க. புதிய அலுவலகம் ஜூன் மாதம் திறப்பு


டெல்லியில் அ.தி.மு.க. புதிய அலுவலகம் ஜூன் மாதம் திறப்பு
x
தினத்தந்தி 9 May 2022 12:26 AM IST (Updated: 9 May 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

மொத்தம் 19 ஆயிரத்து 375 சதுர அடி பரப்பில் 3 தளங்களுடன் இந்த கட்டிடம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில் தேசிய கட்சிகளுக்கு மட்டுமின்றி மாநில கட்சிகளுக்கும் தகுதியின் அடிப்படையில் இடம் வழங்கப்படுகிறது. இதன்படி அ.தி.மு.க.வுக்கு சாகேத் பகுதியில், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது இடம் வழங்கப்பட்டது.

இந்த இடத்தில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து உள்ளன. மொத்தம் 19 ஆயிரத்து 375 சதுர அடி பரப்பில் 3 தளங்களுடன் இந்த கட்டிடம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

கட்டிடத்துக்கான மாநகராட்சி அனுமதி, தீயணைப்புத்துறை அனுமதி மற்றும் மின் வாரிய அனுமதி உள்ளிட்ட நடைமுறைகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. 2 நாட்கள் டெல்லியில் தங்கி இருந்து முடித்து கொடுத்துள்ளார். இந்த கட்டிடம் திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூன்) திறப்பு விழா நடைபெறும் என டெல்லி அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story