பெங்களூரு: அரசுப்பேருந்து மேம்பால தூணில் மோதி விபத்து - 25 பேர் காயம்; 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

பெங்களூரு: அரசுப்பேருந்து மேம்பால தூணில் மோதி விபத்து - 25 பேர் காயம்; 4 பேருக்கு தீவிர சிகிச்சை!
x
தினத்தந்தி 9 May 2022 3:02 AM GMT (Updated: 2022-05-09T08:32:42+05:30)

பெங்களூருவில் கர்நாடக அரசுப்பேருந்து ஒன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானது.

பெங்களூரு,

பெங்களூருவில் கர்நாடக அரசுப்பேருந்து ஒன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானது. 

கர்நாடக மாநிலம் மடிகேரியில் இருந்து வந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்தனர். பெங்களூரு நகருக்குள் பேருந்து வந்து கொண்டிருந்த போது, திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 25 பேர் சிறு காயங்களுடன் தப்பித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story