திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலியை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட காதலன்..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 9 May 2022 6:37 PM GMT (Updated: 2022-05-10T00:07:48+05:30)

ஆந்திராவில் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலியை சுட்டுக் கொன்று காதலன் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லூர்,

ஆந்திராவில் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் தாடிபத்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேப்பள்ளி சுரேஷ் ரெட்டி (வயது 33). இவர் தான் காதலித்து வந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் பெற்றோரின் விருப்பப்படி தான் திருமணம் செய்து கொள்ளுவேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், காதலியின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். தொடர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story