எல்.ஐ.சி. பங்குகள் வாங்க 3 மடங்கு பேர் பதிவு
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 5 சதவீத பொது பங்குகளை விற்பனை செய்ய முதலில் மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
புதுடெல்லி,
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 5 சதவீத பொது பங்குகளை விற்பனை செய்ய முதலில் மத்திய அரசு முடிவு செய்திருந்தது. பிறகு 3.5 சதவீதமாக குறைத்துக் கொண்டது. சமீபத்தில், 3.5 சதவீத பங்குகளான 16 கோடியே 20 லட்சத்து 78 ஆயிரத்து 67 பொது பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன.
இவற்றுக்கு பதிவு செய்ய நேற்று கடைசிநாள் ஆகும். இந்த பங்குகளை வாங்க சுமார் 3 மடங்குபேர், அதாவது 47 கோடியே 83 லட்சத்து 25 ஆயிரத்து 760 பேர் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி கிடைக்கும்.
ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லரை முதலீட்டாளர்களுக்கும், தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கும் ரூ.60 வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story