இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!
கடந்த 24 மணி நேரத்தில், 3,044 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,288 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 3 ஆயிரத்து 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. இதன் காரணமாக, இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4,31,07,689 ஆக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில், 3,044 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,63,949 ஆக உயர்ந்தது.
ஆனால், சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,24,103 ஆக உயர்ந்தது.தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 19,637 ஆக உள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 13,90,912 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 50 லட்சத்து 86 ஆயிரத்து 706 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story