தென் கொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள யூன்-சுக்-இயோல்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!


தென் கொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள யூன்-சுக்-இயோல்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!
x
தினத்தந்தி 10 May 2022 1:20 PM IST (Updated: 10 May 2022 1:20 PM IST)
t-max-icont-min-icon

தென் கொரியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில்  நாட்டின் உயர்மட்ட வழக்கறிஞராக இருந்தவரான  யூன் சுக் இயோல் குறுகிய வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  புதிய அதிபராக யூன் சுக் இயோல் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. 

இதனையடுத்து, தென் கொரியாவின் புதிய அதிபராக பதவியேற்ற யூன் சூகிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

“இன்று தென் கொரியாவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள யூன் சுக்-யோலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை விரைவில் சந்திப்பதற்கும், இந்தியா-தென் கொரியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும், வளர்க்கவும் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன்.”

இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.

Next Story