மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் அடுத்த இரு நாட்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் - இந்திய வானிலை ஆய்வு மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 May 2022 4:04 PM IST (Updated: 10 May 2022 4:04 PM IST)
t-max-icont-min-icon

அசானி புயல் முன்னெச்சரிக்கையாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. 

அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசானி புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் அடுத்த இரு நாட்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் முன்னெச்சரிக்கையாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story