அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார், பினராயி விஜயன்


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 10 May 2022 11:02 PM GMT (Updated: 2022-05-11T04:32:12+05:30)

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார்.

திருவனந்தபுரம், 

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தனது உடல்நல கோளாறுக்காக அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள மாயோ கிளினிக்கில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்பாக 2018 மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார். 

சமீபத்தில் 3-வது முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். சிகிச்சைக்கு இடையே ஓய்வு வேளையில் அங்கிருந்தபடி அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைனில் கலந்துகொண்டார். முக்கிய கோப்புகளிலும் மின்னணு முறையில் கையொப்பமிட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்த பினராயி விஜயன், நேற்று கேரளா திரும்பினார். சிகிச்சை காலத்தில் உதவிக்காக அவரது மனைவி கமலா மற்றும் நேர்முக உதவியாளர் சுனீஷ் ஆகியோர் அவருடன் சென்றிருந்தனர். அவரது அமெரிக்க பயணத்துக்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்கும் என்று தலைமை செயலாளர் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story