உத்தரப்பிரதேசம்: ஆட்டோ மீது லாரி மோதியதில் தாய், மகன் உட்பட 3 பேர் பலி..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 11 May 2022 3:45 PM GMT (Updated: 2022-05-11T21:15:44+05:30)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஹர்தோய்,

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தின் ஹர்பால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கத்ரா- பில்ஹூர் நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மூர்த்தி தேவி (வயது 30) என்ற பெண், அவரது எட்டு வயது மகன் சச்சின் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்வர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
 
விபத்து நடந்ததும் லாரியின் ஓட்டுனரும், உதவியாளரும் சம்பவ இடத்திலிருந்த தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story