திருமணத்தன்று மணமகன் குடிபோதையில் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்..!
மத்தியப்பிரதேசத்தில் திருமணத்தன்று மணமகன் குடிபோதையில் இருந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
ரேவா,
மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் வினோத் சுக்லா என்பவரின் மகள் நேஹாவுக்கும், நாகேந்திரமணி மிஸ்ரா என்பவரின் மகன் பியூஷ் மிஸ்ராவுக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் திருமணத்தன்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின் போது மணமகன் குடிபோதையில் இருப்பது மணமகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை திருமணம் செய்துகொள்ள மணமகள் மறுத்துள்ளார். மணமகளது முடிவை முழுமையாக ஏற்றுக்கொண்ண பெண்ணின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தினர்.
அதன்பிறகு, போலீஸ் நிலையம் சென்று பரஸ்பர ஒப்புதலுடன் பரிமாறப்பட்ட பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைத் திருப்பித் தர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
Related Tags :
Next Story