தாஜ்மஹாலுக்காக இழப்பீடு கொடுத்த முகலாய பேரரசர் ஷாஜகான் - பாஜக எம்.பி பேச்சால் புதிய சர்ச்சை
தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் ஜெய்ப்பூர் ஆட்சியாளர் ஜெய் சிங்கிற்கு சொந்தமானது.முகலாய பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்று பாஜக எம்.பி தியா குமாரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன், அப்பகுதியில் கோயில் இருந்ததாகக் கூறி தற்போது மீண்டும் தொடுக்கப்பட்ட வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அயோத்தியின் பாஜக செய்தித்தொடர்பாளரான டாக்டர்.ரஜ்னீஷ் என்பவர் தொடுத்த மனு, கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் ஆட்சியாளர் ஜெய் சிங்கிற்கு சொந்தமானது என்றும் இது முகலாய பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும் பாஜக எம்பி தியா குமாரி கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன் அங்கு என்ன இருந்தது என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் அதனை தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
அதற்கான சான்றுகள் மற்றும் ஆவணங்கள் முந்தைய ஜெய்ப்பூர் அரச குடும்பத்திடம் உள்ளன. அப்போதைய காலகட்டத்தில், நீதித்துறை இல்லாததால், அப்போது மேல்முறையீடு செய்திருக்க முடியாது. பதிவேடுகளை ஆய்வு செய்த பிறகே விஷயங்கள் தெளிவாகும் என்று பாஜக எம்.பி. தியா குமாரி கூறினார்.
Related Tags :
Next Story