மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகள் சரிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகள் சரிவு
x
தினத்தந்தி 12 May 2022 10:43 AM IST (Updated: 12 May 2022 10:43 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகள் சரிவடைந்து உள்ளது.




மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 800க்கும் கூடுதலான புள்ளிகள் சரிவடைந்து 53,275 ஆக இருந்தது.  தொடர்ந்து பங்கு வர்த்தகம் சரிவை நோக்கி சென்றது.  இதனால், காலை 9.50 மணியளவில் 1,000 புள்ளிகள் சரிவடைந்து உள்ளது.  இது 1.52% சரிவு ஆகும்.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 245 புள்ளிகள் முதலில் சரிவடைந்து 16,000க்கு கீழ் சென்றது.  தொடர்ந்து சரிவடைந்து 15,500ஐ எட்டும் என கூறப்படுகிறது.

எனினும் சென்செக்ஸ் குறியீட்டில் இந்திய மின்சார வினியோக அமைப்பு லாபத்துடன் காணப்படுகிறது.  பஜாஜ் ஆட்டோவும் 0.40% லாபத்துடன் உள்ளது.  இதுதவிர, மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பிற பங்குகள் அனைத்தும் நஷ்டத்திலேயே காணப்பட்டன.


Next Story