புதுடெல்லி: புல்டோசர்கள் கொண்டு சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!


புதுடெல்லி: புல்டோசர்கள் கொண்டு சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!
x
தினத்தந்தி 12 May 2022 1:04 PM IST (Updated: 12 May 2022 1:04 PM IST)
t-max-icont-min-icon

புதுடெல்லியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

புதுடெல்லியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக மாநகராட்சி நடவடிக்கை தொடங்கியுள்ளது.

புதுடெல்லியில் உள்ள ஜனக்புரி மற்றும் துவாரகா பகுதிகள் மற்றும் படேல் நகர், பிரேம் நகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ஜேசிபி புல்டோசர்கள் கொண்டு சாலையில் உள்ள கடைகளின் விரிவாக்கப்பட்ட பகுதிகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடைபாதையை ஒட்டியிருந்த கடைகள் இடிக்கப்பட்டன.
ஜனக்புரியில் கடைக்கு வெளியே சுமார் 20 அடி நீளத்துக்கு சட்டவிரோதமாக கட்டப்பட்ட கொட்டகை இடிக்கப்பட்டது. டெல்லியின் ரோகினியில் உள்ள கே.என்.கட்ஜு மார்க் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு  அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story