ஆந்திராவில் பரபரப்பு: முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு!
ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, முன்னாள் மந்திரி நாராயணசாமி உள்பட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, முன்னாள் மந்திரிகள் மீது சிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஆந்திர முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, ஒய்எஸ்ஆர் காங்கிரசின் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ஆலராமகிருஷ்ண ரெட்டி கடந்த மாதம் புகார் அளித்தார். அதன் பேரில் சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மந்திரி நாராயணா மற்றும் பலர் மீது சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், நகராட்சி துறை மந்திரியாக இருந்த நாராயணா, நேரடியாக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதற்கு உடந்தையாக முன்னாள் மந்திரிகள் லிங்கமனேனி ரமேஷ், லிங்கமனேனி வெங்கடசூர்யா ராஜசேகர் மற்றும் லிபில் புராஜக்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அஞ்சனிகுமார் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் மீதும் சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமராவதியை தலைநகராக அமைக்க, விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story