தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது..!!
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ந் தேதி கேரளாவில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. முதல் மழை, 15-ந் தேதி அந்தமானில் பெய்கிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 15-ந் தேதிவாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.
அந்தமானில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிகிறது. இதுபோல், கேரளாவிலும் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வெயிலின் அளவு அதிகமாக இருப்பதால், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story