கடலில் இருந்து வந்த விசித்திர தேரில் மறைந்திருந்த ரகசிய குறியீடு - வெளியான புதிய தகவல்


கடலில் இருந்து வந்த விசித்திர தேரில் மறைந்திருந்த ரகசிய குறியீடு - வெளியான புதிய தகவல்
x
தினத்தந்தி 13 May 2022 2:37 PM IST (Updated: 13 May 2022 2:37 PM IST)
t-max-icont-min-icon

அசானி புயல் காரணமாக, ஆந்திர மாநிலத்தில் கடலில் அடித்து வரப்பட்ட விசித்திர தேர், தங்க முலாம் பூசப்பட்ட மரத்தேர் என கடற்படை காவல்துறை தெரிவித்துள்ளது.

அமராவதி,

அசானி புயலின் தாக்கத்தால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கடற்கரைக்கு, கடலில் இருந்து அடித்து வரப்பட்ட விசித்திர தேர், மியான்மரில் இருந்து வந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இத்தேரினைக் கண்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தேர் தங்கத்தில் செய்யப்பட்டது என கருத்து தெரிவித்திருந்தனர். இத்தேர் குறித்து ஆய்வு செய்த கடலோர காவல்படையினர், அத்தேரில் எழுதப்பட்டிருந்ததை மொழிப்பெயர்ப்பு செய்தபோது, சீன-திபெத்திய மொழியான பர்மிய மொழி என கண்டறியப்பட்டது. 

அதில், 1383 ஆம் ஆண்டு, முதல் முழு நிலவு நாளின், 15 வது நாள் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், அது தங்க வர்ணம் பூசப்பட்ட தேர் என்றும், அதன் அமைப்பு மரத்தால் ஆனது என்றும் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story