பிரபல மாடல் அழகி மர்மமான முறையில் உயிரிழப்பு: கணவரிடம் போலீசார் விசாரணை
கேரளாவில் 19 வயதில் திருமணம் செய்து கொண்ட பிரபல மாடல் நடிகை ஷகானா மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ஷகானா என்பவர் பிரபல மாடல் அழகி ஆவார். திரைப்டங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள இவர், கோழிக்கோட்டை சேர்ந்த ஷாஜத் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், நேற்று கோழிக்கோட்டிலுள்ள கணவர் வீட்டில் ஷகானா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ஷகானாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆனதால் சந்தேகத்தின் பேரில் ஷகானாவின் கணவர் ஷாஜத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ஷாஜத் அடிக்கடி தன் மனைவியிடத்தில் சண்டை போட்டு வந்ததாகவும் , இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஷகானாவின் கணவரிடம் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் பிரபல மாடல் அழகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story