டெல்லியில் உள்ள பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து - 20 பசுக்கள் உயிரிழப்பு
டெல்லியில் உள்ள பால் பண்ணையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கி 20 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ரோகிணி சவ்தா என்ற கிராமத்தில் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் இன்று நண்பகலில் 1.25 மணி அளவில் தீடீரென தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா். 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் 20 பசுக்கள் தீயில் கருகி உயிாிழந்தது.
இந்த விபத்து குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த மாதம், டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் உள்ள பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 பசுக்கள் உயிாிழந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story