பஞ்சாப் குருநானக் தேவ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
பஞ்சாப் மாநிலம் அமிா்தரஸ் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் அமிா்தரஸ் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றியது. பின் இந்த தீயானது மருத்துவமனைக்கு பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினா். இதனால் பெரும் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினா் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனா். 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீயணைப்பு துறை அதிகாாிகள் கூறுகையில், மின்மாற்றி தீப்பிடிக்க அதிக வெப்பம் காரணமாக இருக்கலாம். 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தற்போது தீ கட்டுக்குள் உள்ளது எனவும் தொிவித்தாா். உரிய நேரத்தில் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற தீ விபத்தில் 30 உயிாிழந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story