திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: வி.ஐ.பி தரிசனம் ரத்து


திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: வி.ஐ.பி தரிசனம் ரத்து
x
தினத்தந்தி 14 May 2022 10:36 PM IST (Updated: 14 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜூலை 15-ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.

மாட வீதிகளில் நீர் பந்தல்கள், வெள்ளைநிற குளிர்ச்சி பெயின்ட், சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story