இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் பதவி ஏற்பு
இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் இன்று பொறுப்பேற்றார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்து வந்த சுசில் சந்திரா பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவர் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்திருந்தார்.
கடந்த 2020 ஆண்டு முதல் தேர்தல் ஆணையராக இருந்து வந்த ராஜீவ் குமார், பீகார், மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜீவ் குமார், மிகச்சிறந்த அமைப்பை நடத்துவதை கவுரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள் ஆலோசித்து ஒருமித்த கருத்துகளோடு செயல்படுத்தப்படும் என்றும் கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்காது என்றும் கூறியுள்ளார்.
2025-ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்க உள்ள நிலையில், குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன.
Related Tags :
Next Story