இந்திய பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் தொடக்கம்..!
இந்திய பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை,
இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது.
கடந்த வெள்ளிக்கிழமை 52,793.60 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
9.40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 473.23 புள்ளிகள் உயர்ந்து 53,266.56 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 148.80 புள்ளிகள் அதிகரித்து 15,930.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Related Tags :
Next Story