இந்திய பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்தது பாஜக - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


இந்திய பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்தது பாஜக - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 May 2022 1:31 PM IST (Updated: 16 May 2022 1:40 PM IST)
t-max-icont-min-icon

பாஜக அரசு நமது பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கர்னாவில் ராகுல்காந்தி பேசியதாவது:-

காங்கிரசுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது மற்றும் ஆழமானது. நாங்கள் உங்கள் வரலாற்றைப் பாதுகாக்கிறோம். உங்கள் வரலாற்றை அழிக்கவோ அல்லது அடக்கவோ நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​உங்களது நிலம், காடு, நீர் ஆகியவற்றைப் பாதுகாக்க சிறப்புமிக்க வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தோம்:.

இந்தியாவில் இன்று  நடக்கும் சண்டை இது. நாங்கள் மக்களை இணைக்கிறோம், அவர்கள் மக்களை பிரிக்கிறார்கள். பலவீனமானவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய தொழிலதிபர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

பாஜக அரசு நமது பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்துள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டியை பிரதமர் அமல்படுத்தினார். அதனால் நமது பொருளாதாரத்தை அது அழித்துவிட்டது. முந்தையகாங்கிரஸ் அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்த உழைத்தது ஆனால் பிஜேபி மற்றும் பிரதமர் மோடி அதை சேதப்படுத்தினர். நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் நிவவி வருகிறது.

இரண்டு இந்தியாவை உருவாக்க பாஜக விரும்புகிறது - ஒன்று பணக்காரர்களுக்கு, 2-3 பெரிய தொழிலதிபர்களுக்கு, மற்றொன்று ஏழைகள், பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பலவீனமானவர்களுக்கு. எங்களுக்கு இரு இந்தியா வேண்டாம், அனைவரும் தங்கள் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பைப் பெறும் ஒரே இந்தியா வேண்டும் என்றார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story