இந்தியாவில் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது - ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் குற்றச்சாட்டு
இந்தியாவில் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கலவரத்தால் பயனடைவது காங்கிரஸா? மக்களுக்குத் தெரியும் கலவரங்கள் மூலம் பயனடைவது எந்தக் கட்சி என்று. கலவரம் ஏற்பட்டால் காங்கிரஸ் எப்போதும் பின்னடைவையே சந்திக்கும்.
பாஜக தற்போது இந்து மக்களின் வாக்குகளைப் பெறலாம். நாட்டில் ஒரு "ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்" பிரதமராக உள்ளார்.
ஆனால் எதுவரை அது தொடரும். நாட்டில் தற்போது பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடு இயங்குவதற்கு ஜனநாயகமும் அரசியலமைப்பும் உதவுகிறது. ஆனால் படிப்படியாக ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த சில நாளிகளில் மட்டும் ஒரே மாதிரியான பின்னணியில் 7 மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
அமித் ஷாவிற்கு தைரியம் இருந்தால், சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்கட்டும். அப்படி செய்தால் கலவரத்திற்கு பின்புலமாக இருந்தவர்கள் வெளிப்படுவார்கள் என்றார்.
Related Tags :
Next Story