அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு


அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 May 2022 10:09 AM GMT (Updated: 16 May 2022 10:09 AM GMT)

அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இடாநகர்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில்   பல இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், பஞ்சாபி தாபா அருகே இடைவிடாது பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. 

அங்கிருந்த வீடு ஒன்று நிலச்சரிவில் மூழ்கியது. இந்த இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் நாகென் பர்மன்(50) மற்றும் தபஸ் ராய் (15) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

குசும் ராய் (35) என்ற பெண் இன்னும் மீட்கப்படவில்லை. எனவே, இவரை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  எனினும், மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 


Next Story