‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆயுதப்படைகள் மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனவே நீட் தே ர்வுக்கு விண்ணிப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தேசிய தே ர்வு ஏஜென்சிக்கு ஆயுதப்படைகள் மருத்துவ சேவை நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து இளநிலை மருத்துவபடிப்புகளுக்கான நீட் தே ர்வுக்கு விண்ணிப்பிக்கும் கால அவகாசம் வருகிற 20-ந்தே தி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை தேசிய தே ர்வு ஏஜென்சி அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story