"டிஜிட்டல் பலாத்காரம் என்றால் என்ன...? " 7 ஆண்டுகளாக சிறுமியை டார்ச்சர் செய்த 80 வயது ஆசிரியர்


டிஜிட்டல் பலாத்காரம் என்றால் என்ன...?  7 ஆண்டுகளாக சிறுமியை டார்ச்சர் செய்த 80 வயது ஆசிரியர்
x
தினத்தந்தி 17 May 2022 11:19 AM IST (Updated: 17 May 2022 11:19 AM IST)
t-max-icont-min-icon

கட்டைவிரல் மற்றும் கால்விரல் 'டிஜிட்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இந்த செயலுக்கு 'டிஜிட்டல் பலாத்காரம் ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி

80 வயதான மாரிஸ் ரைடர் என அடையாளம் காணப்பட்ட ஒரு  நபர், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பல்வேறு அநாகரீக செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.17 வயது சிறுமியை ஏழு ஆண்டுகளாக  அவர் டார்ச்சர் செய்து உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரை பெற்றுக்கொண்ட நொய்டா போலீசார், இந்திய தண்டனைச்சட்டம்  376, கற்பழிப்பு, 323, தானாக முன்வந்து காயப்படுத்துதல் மற்றும் 506 குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் அவரது கொடூரமான செயலை எதிர்த்ததற்காக அவரை அடித்து உள்ளார்.

2013 வரை 'டிஜிட்டல் பலாத்காரம்' பாலியல் வன்கொடுமையாக கருதப்பட்டது . 2012 ஆம் ஆண்டு நடந்த கொடூரமான நிர்பயா கும்பல் பலாத்கார சம்பவத்திற்குப் பிறகுதான், புதிய பலாத்காரச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 

'டிஜிட்டல் கற்பழிப்பு' என்பது டிஜிட்டல் தளத்தில் ஒருவரின் அடையாளத்தை சிதைப்பதுடன் தொடர்புடையது என்று பலர் கருதுகின்றனர். ஆனால் இந்த வார்த்தையின் அர்த்தம் மற்றவரின் அந்தரங்க உறுப்புகளுக்குள் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக விரல்கள் அல்லது கால்விரல்களை நுழைப்பது. ஆங்கில அகராதியில், விரல், கட்டைவிரல் மற்றும் கால்விரல் 'டிஜிட்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இந்த செயலுக்கு 'டிஜிட்டல் பலாத்காரம் ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையின்படி, இத்தகைய குற்றங்கள் 70 சதவீத வழக்குகள் நெருங்கிய மற்றும்  குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படுகின்றன. இருப்பினும், மிகக் குறைவான குற்றங்களே பதிவு செய்யப்படுகின்றன. ஏனென்றால், பலாத்காரச் சட்டங்கள் மற்றும் ‘டிஜிட்டல் ரேப்’ என்ற சொல்லைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. சட்டத்தின்படி, குற்றவாளிக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில், இந்த தண்டனை 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் அல்லது ஆயுள் தண்டனையும் கூட இருக்கலாம்.

Next Story